FAKE PILOT SCAM (RAJASTHAN) - போலி பைலட் லைசென்ஸ் ஊழல் (ராஜஸ்தான்)

f1

போலியாக விமான ஓட்டும் லைசென்ஸ் வழங்கிய விவகாரத்தில் ராஜஸ்தான் பாஜக அரசின் முன்னாள் அமைச்சர் மதன் திலவரின் மகன் உள்பட மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டனர். வணிகரீதியான பைலட் உரிமங்களுக்காக விமானம் ஓட்டும் கிளப்புகளில் பயிற்சி பெறவேண்டும். இப்படி பயிற்சி பெற்ற பலர் முறையான பயிற்சியை எடுக்காமல், குறைவான நாட்கள், குறைவான மணிநேரம் பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு உரிமம் வழங்கியதாக அமைச்சரின் மகன், பயிற்சியாளர்கள், சான்றிதழ் கொடுப்பவர் என்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

FIRE EXTINGUISHERS SCAM (MAHARASHTRA) - தீயணைப்புக் கருவிகள் வாங்கியதில் ஊழல் (மகாராஸ்டிரா)

Advertisment

f2

பாஜக தலைவரும் மகாராஸ்டிரா கல்வி அமைச்சருமான வினோத் டவாடே மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 191 கோடி ரூபாய் மதிப்பில் தீயணைப்புக் கருவிகள் வாங்க ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், இதற்காக முறைப்படி அரசு சார்பில் இ-டெண்டர் கோரவில்லை. இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால் தீயணைப்புக் கருவிகள் வாங்குவது நிறுத்தப்பட்டது.

FISHING CONTRACTS SCAM (GUJARAT) - மீன்பிடிக்கும் காண்ட்ராக்டில் ஊழல் (குஜராத்)

Advertisment

scam

குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு சார்பில் சுமார் 38 லட்சம் ஏரிகளில் மீன்பிடிக்க ஏனோதானோவென்று மீன்பிடி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதற்காக எவ்வகையிலும் டெண்டர்கள் கோரப்படவில்லை. இத்தனைக்கும் ஏரி ஒன்றுக்கு சில ஏலதாரர்கள் 25 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் கொடுக்க தயாராக இருந்தார்கள்.

FAKE CURRENCY (KERALA) - போலி ரூபாய் நோட்டு ஊழல் (கேரளா)

f4

பாஜக ஆட்சியில் இருக்கிற மாநிலங்களில் மட்டும்தான் பாஜகவினர் ஊழல் புரிவார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். மோடியின் ஆசியைப் பெற்றிருந்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலோ, கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலோகூட ஊழல் செய்ய முடியும். கேரளா மாநிலம் திரிசூரில் பாஜக தலைவர் ராகேஷ் செய்த காரியத்தைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு போலி இந்திய ரூபாய் நோட்டுகள்தான் காரணம். அதற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றார் மோடி. ஆனால், கேரளாவில் பாஜக தனது தீவிரவாத செயல்களை நடத்த, கள்ளநோட்டுகளையே பிரிண்ட் செய்திருக்கிறது. பாஜக இளஞர் பிரிவு தலைவரான ராகேஷ் ஒன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு 20 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை நோட்டுகளை அச்சடித்து கைதானார்.