பஞ்சமூல ஸ்தலங்களில் நிலத்திற்குரியதாகப் போற்றப்படக்கூடிய பழமையும் பெருமையும், உலகப் பிரசித்தி பெற்றது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆகும். சுமார்  29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் திருப்பணிகள்  நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (08.12.2025) அதிகாலையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Advertisment

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த குமார்பிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் உள்ள  புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரான கலசங்கள் மற்றும்  யாகசாலைகள் வைத்துச் சிறப்புப் பூஜைகள் சிறப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 

Advertisment

மூலவர் கோபுரங்கள், ராஜ கோபுரம் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு கோபுரங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு காஞ்சிபுரத்தில் 149 பள்ளிகளுக்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 27 இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.