ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரத்தியதற்காக பல்வேறு நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் நடிகர்கள் ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரக்கொண்டா, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட 25 நபர்கள் மீது சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதற்காக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரத்திய வருவாய் ஈட்டியதாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியன் கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களையும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

Advertisment

அந்த வகையில், இந்த வழக்கு குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி மற்றும் தவானின் ரூ.4.50 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.