10வது டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 8 வரை மொத்தம் ஒரு மாதம் இப்போட்டி நடக்கிறது. இப்போட்டியை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துவதால் இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதில் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 நாட்டு அணிகள் போட்டியிடுகிறது.
இதில் இந்தியா ஏ பிரிவில் இருக்கிறது. முதல் போட்டியாக பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்சர் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ சார்பில் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளரை சந்தித்து அறிவித்தார்.
கேப்டன், துணை கேப்டனை தவிர்த்து சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் துணை கேப்டனாக செயல் பட்டு வந்த சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவும் நீக்கப்பட்டு அவருக்கு பதில் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். அதே சமயம் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்ததி அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Follow Us