Advertisment

தொடங்கும் டி-20 கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தானுக்கு நிலவும் சிக்கல்!

t20cricket

T20 cricket match to start tomorrow

டி20 2026 உலகக் கோப்பை தொடர் நாளை (07-02-26) முதல் ஆரம்பமாக உள்ளது. இதில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா போன்ற அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில், ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நேபாளம், இத்தாலி, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் டி பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisment

இந்த அணிகளில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். முதலில் நாளை மாலை 7 மணியளவில் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் அமெரிக்காவும் இந்தியாவும் மோத உள்ளன. மோனங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணி, பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வந்துள்ளது. சமீபத்திய பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை, இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இருப்பினும், இந்த தொடரில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு, அந்த அணி தொடரை வெல்வதில் சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்த அணி அறிவித்துள்ளது. இதனால், அந்த அணி 2 புள்ளிகளை இழக்க நேரிடும். அதோடு ரன் ரேட்டிலும் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், மீதமுள்ள மூன்று அணிகளிடமும் விளையாடவுள்ள, ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் வென்றால் தான் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை, இவற்றில் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால் கூட அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறமுடியாத நிலை உருவாகும். 

இந்த சவாலான சூழலிலும், இந்திய அணியுடன் விளையாடப் போவதில்லை என்ற முடிவில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் இந்த தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணியுடன் மோத  உள்ளது. இந்த போட்டி நாளை கொழும்பில் காலை 11 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில், பாகிஸ்தான் விளையாட உள்ள ஒவ்வொரு போட்டியும், அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

world cup
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe