Advertisment

அசத்தல் பாண்டியாவுக்குக் கிடைத்த கியூட் சியர் லீடர்!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியின் பேட்ஸ்மென்கள், இந்திய பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் 70 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன்மூலம், இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்தப் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த ஹர்தீக் பாண்டியா 9 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். அதில் 1 பவுண்டரியும் 4 சிக்ஸர்களும் அடக்கம். இந்திய அணி அதிகளவு 200 ரன்களைக் கடந்த அணி என்ற உலக சாதனையை சமன்செய்ய, ஹர்தீக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தால், பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா, ‘கம் ஆன்... கமான் ஹர்தீக்’ என உற்சாகப்படுத்தும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்தீக் பாண்டியா, எனக்கு ஒரு சியர்லீடரை நானே கண்டுபிடித்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisment

indian cricket ziva Hardik pandya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe