Advertisment

அது ரகசியம்! ஸ்டெய்ன் கேள்விக்குப் பதிலளித்த சாஹல்!

Yuzvendra Chahal

Advertisment

அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்குப் பின், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா விரைந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடருக்காக சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், தீவிரப்பயிற்சியில்ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி, சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி வீரரான யுகேந்திர சாஹல், சிட்னியில் தான் வலைப்பயிற்சியில் ஈடுபடும் காணொளியை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, அதில் இம்முறை இந்தியாவிற்காக ரன் சேர்க்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெய்ன், ஆஃப் ஸ்பின் வகை வேகப்பந்தையா எதிர்கொள்கிறீர்கள்?எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாஹல், 'அது ரகசியம் சார்' எனப் பதிலளித்தார்.

ஐ.பி.எல் தொடரில், இவ்விரு வீரர்களும் இணைந்து பெங்களூரு அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Yuzvendra Chahal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe