Skip to main content

அது ரகசியம்! ஸ்டெய்ன் கேள்விக்குப் பதிலளித்த சாஹல்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

Yuzvendra Chahal

 

அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்குப் பின், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா விரைந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடருக்காக சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி, சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி வீரரான யுகேந்திர சாஹல், சிட்னியில் தான் வலைப்பயிற்சியில் ஈடுபடும் காணொளியை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, அதில் இம்முறை இந்தியாவிற்காக ரன் சேர்க்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.

 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெய்ன், ஆஃப் ஸ்பின் வகை வேகப்பந்தையா எதிர்கொள்கிறீர்கள்? எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாஹல், 'அது ரகசியம் சார்' எனப் பதிலளித்தார். 

 

ஐ.பி.எல் தொடரில், இவ்விரு வீரர்களும் இணைந்து பெங்களூரு அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

யுவராஜ் சிங்கை கைது செய்த ஹரியானா காவல்துறை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

yuvraj singh

 

கடந்த வருடம் ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, குறிப்பிட்ட ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் குறித்துப் பேசினார். யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

 

அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து சர்ச்சைக்கு விளக்கமளித்த யுவராஜ் சிங், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலினப் பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" என தெரிவித்திருந்தார்.

 

இருப்பினும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் யுவராஜ் சிங் மீது புகாரளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்தநிலையில், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், யுவராஜ் சிங் நேற்று (17.10.2021) இரவு ஹரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சில மணிநேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

 

 

Next Story

யுவராஜ் சிங் மீது F.I.R பதிவு - ஹரியானா போலீஸார் நடவடிக்கை!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

YUVRAJ SINGH

 

கடந்த ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடும்போது, வட இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 

 

இதனையடுத்து யுவராஜ் சிங், சர்ச்சைக்குரிய தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது யுவராஜ் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. புகாரளிக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.