அதிரடி பேட்டிங், சுறுசுறுப்பான ஃபீல்டிங், ஆச்சர்யம் தரும் பந்துவீச்சு என பல இந்திய ரசிகர்களின் பிடித்தமான வீரராக அறியப்படும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

Advertisment

yuvraj singh posted a video with his indian team jersy

இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் யுவராஜ் சிங்குக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்துகளுக்கு நன்றி கூறியும், பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அணிந்து விளையாடிய 12 நம்பர் ஜெர்சி ஆடைக்கு பிரியா விடை கொடுக்கும் பொருளில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.