ADVERTISEMENT

முதல் பந்தே சிக்ஸர்... ஃபார்முக்கு திரும்புவாரா யுவராஜ் சிங்? 

11:56 AM Mar 16, 2019 | santhoshkumar

2014 மற்றும் 2015 ஐ.பி.எல். சீசனுக்கான ஏலங்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். ஆனால் இந்த வருட ஐ.பி.எல். ஏலத்தின் முதல் சுற்றில் அடிப்படை விலைக்குக் கூட அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இறுதி சுற்றுகளில்மும்பை அணி அடிப்படை விலைக்கு எடுத்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 4 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் பெரியளவில் பங்களிக்க முடியாமல் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் யுவராஜ் சிங். இந்த ஆண்டு மும்பை அணிக்கு விளையாடவுள்ள நிலையில் அவர் விளையாடும் 6-வது ஐ.பி.எல். அணியாக மும்பை இந்தியன்ஸ்அணி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றது முதல் தொடர்ந்து யுவராஜ் சிங் அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய அணி 2007 டி20 மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள்உலகக்கோப்பைகளை வென்றபோது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் யுவராஜ். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கேன்சர் நோய் தீவிரமடைந்த நிலையிலும் நாட்டிற்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று காட்டியவர். 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் நிரந்தரமாக விளையாடவில்லை. 2017-ஆம் ஆண்டு 11 ஒருநாள்போட்டிகளில் விளையாடி 372 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்சராசரி 41.33 என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் இல்லாதது அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங்,விக்கெட்களை எடுக்கும் ஸ்பின் பவுலிங், மாஸ் பீல்டிங் என மூன்றிலும் கலக்கும் இவரைப் போல ஒரு வீரர் இந்திய அணிக்கு அவசியத் தேவையாக உள்ளது. பிட்னஸ், வயது, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் உள்ளிட்ட காரணங்களால் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்து வருகிறார்.

ஐ.பி.எல். தொடருக்கு மும்பை அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியாளரான ராபின் சிங் மும்பை அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான குருணல் பாண்டியாவிற்கு பயிற்சியின்போது 3 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற டார்கெட் கொடுத்தார். முதல் பந்து சரியாக படவில்லை. அந்த பந்தை லெக் சைடில் திருப்பி விட்டார். அடுத்த இரண்டு பந்துகளில் தனது ஆட்டபாணியில் 2 சிக்ஸர்கள் அடித்து ராபின் சிங் விடுத்த பயிற்சியின் சவாலில் வெற்றி பெற்றார் குருணல்.

மும்பை அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் குருணல் பொறுமையாகவும், அதிரடியாகவும் ஆடும் திறமை உடையவர். 3 பந்துகளுக்கு 10 ரன்கள் போன்ற சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கேற்ப ஒரு டார்கெட் கொடுத்து குருணல் பாண்டியாவை பலவிதமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயார் செய்து வருகிறார் ராபின் சிங். குருணல் பாண்டியாவின் ரோல் மாடல் யுவராஜ் சிங். ஐ.பி.எல். போட்டிகளில்இருவரும் ஒரே அணியில் முதல்முறையாக ஆடவுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT