yuvraj singh

இந்திய கிரிக்கெட் அணியின், நட்சத்திரம் யுவராஜ்சிங். இன்று, இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூகவலைதளங்களில் ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில்யுவராஜ்சிங், இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதைவிட, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து யுவராஜ் சிங், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் என்பது ஒரு ஆசை அல்லது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். எனவே இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட, நமதுவிவசாயிகளுக்கும் நமது அரசாங்கத்திற்கும் இடையில் நடந்து வரும் பிரச்சனைகளுக்குவிரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, விவசாயிகள்தான் நம் தேசத்தின் உயிர்நாடி. மேலும்அமைதியான உரையாடலின் மூலம் தீர்க்க முடியாத எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று நான் உண்மையாகநம்புகிறேன்". எனகூறியுள்ளார்.