YUVRAJ SINGH

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்போட்டி, கடந்த 24 ஆம் தேதி தொடங்கி, இரண்டேநாட்களில்முடிவடைந்தது. பகலிரவுஆட்டமாகநடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்குமைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமேபேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்தியவீரர்கள்ஓரளவிற்கு சமாளித்தாலும், அஸ்வின்- அக்ஸர் படேல்சுழற்பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இப்போட்டியில், அக்ஸர் படேல்இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து11 விக்கெட்டுகளை அள்ளினார். அஸ்வின்தனது400வது விக்கெட்டைவீழ்த்தி சாதனைபடைத்தார். இஷாந்த் சர்மாவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

Advertisment

இந்தநிலையில் போட்டியில்பயன்படுத்தப்பட்ட பிட்ச்குறித்து, இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள்விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது குறித்து, கிரிக்கெட் ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியவீரர் யுவராஜ்சிங், ‘இரண்டு நாட்களில்போட்டி நிறைவடைந்தது, டெஸ்ட்கிரிக்கெட்டிற்கு நல்லதாஎனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனதுட்விட்டரில், "(மூன்றாவது டெஸ்ட்) இரண்டே நாட்களில் முடிவடைந்துவிட்டது. இது டெஸ்ட்கிரிக்கெட்டிற்கு நல்லதாஎனத் தெரியவில்லை. அனில்கும்ப்ளேமற்றும் ஹர்பஜன் சிங், இந்த மாதிரியான விக்கெட்டுகளில் பந்து வீசியிருந்தால் 1,800 விக்கெட்டுகளில் இருந்திருப்பார்கள்?எனினும் வாழ்த்துக்கள் இந்தியா. அக்சர்படேல்என்ன ஒரு பந்துவீச்சு!வாழ்த்துகள்அஸ்வின், இஷாந்த்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment