yusuf pathan

இந்தியகிரிக்கெட்அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரும், ஆல்ரவுண்டருமான யூசுப்பதான், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இன்று ஓய்வை அறிவித்தார். இந்தியாவிற்காக யூசுப்பதான், 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 இருபதுஓவர்போட்டிகளிலும் விளையடியுள்ளார். 46 சர்வதேச விக்கெட்டுகளையும் யூசுப்பதான்வீழ்த்தியுள்ளார். மேலும், உலகக் கோப்பையைவென்றஇந்தியஇருபது ஓவர் அணியிலும், ஒருநாள் அணியிலும் யூசுப்பதான்அங்கம் வகித்தார்.

Advertisment

மேலும் யூசுப்பதான், 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 பந்துகளில் இவர் அடித்த சதமே ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிவேக சதமாகும். அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் 3,204 ரன்கள் எடுத்துள்ளதோடு, 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளோடு இணைந்து வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர், "இந்தியாவிற்காக இரண்டு உலகக் கோப்பைபோட்டிகளைவென்றதும், சச்சினைதோளில்சுமந்ததும் என்கிரிக்கெட் வாழ்க்கையில்சிறந்ததருணங்கள். நான் சர்வதேசப் போட்டிகளில் தோனி தலைமையிலும், ஐபிஎல் போட்டிகளில் வார்னேதலைமையிலும், ராஞ்சியில் ஜேக்கப் மார்ட்டின் தலைமையிலும் அறிமுகமானேன். என்னைநம்பியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கொல்கத்தாஅணியில், கம்பிரோடு இரண்டு முறை கோப்பையைவென்றோம்அவருக்குநன்றி. மேலும் எனதுஉயர்வு, தாழ்வுகளில் என்னோடு இருந்த, எனதுதம்பியும், எனதுமுதுகெலும்புமான இர்பான்பாதனுக்குநன்றி சொல்லவிரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment