Advertisment

தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை - விராட் கோலி !

virat kohli

இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய சிறிது நாட்களிலேயே, அவர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாகதென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்குபின்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும்விராட் கோலி விலகினார்.

Advertisment

டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில்பயர்சைட் சாட் விகே என்ற நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, தலைவனாக இருக்க கேப்டனாக இருக்கவேண்டிய அவசியமில்லை எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாகவிராட் கோலி கூறியுள்ளதாவது; முதலில் நீங்கள் எதைச் சாதிக்க நினைத்தீர்கள் அந்த இலக்குகளை அடைந்துவிட்டீர்களா இல்லையா என்பதை குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் மற்றும் நேரம்உள்ளது. நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு என்னால் அதிகமாக பங்களிக்கமுடியும். அதில் பெருமைப்படுகிறேன்.

தலைவனாகஇருப்பதற்கு நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தோனி அணியில் இருந்தபோது, அவர் தலைவராகவே இருந்தார். அவரிடம் இருந்து ஆலோசனைகளை பெறவே விரும்பினோம். வெற்றி பெறுவது அல்லது வெற்றி பெறாமால்போவது என்பது உங்கள் கைகளில் இல்லை. சிறந்து விளங்க முயற்சிப்பதும், ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க வேண்டும் என முயற்சிப்பதும் குறுகிய காலத்தில் செய்யக் கூடிய ஒன்றல்ல.

பதவியை விட்டு நகர்ந்து செல்வதும், அதை செய்வதற்கான சரியான நேரத்தை அறிந்து வைத்திருப்பதும்தலைமைத்துவத்தின் ஒரு அங்கமாகும். ஒருவர் எல்லா வகையான பாத்திரங்களையும் வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் தோனியின் கீழ் சிறிது காலம் விளையாடினேன், பின்னர் கேப்டனானேன். எனது மனநிலை எப்போதும் ஒரேமாதிரியாகவேஇருந்தது. நான் அணியில் ஒரு வீரராக இருந்தபோதும் கேப்டனை போலவே யோசித்தேன். இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe