Advertisment

சச்சின், ரோகித் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் ஜுனியர் உலகக்கோப்பை அணி கேப்டன்!

yash dhull

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் யாஷ் துள்லை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Advertisment

இந்தநிலையில் யாஷ் துள், இன்று தனது அறிமுக ரஞ்சி ட்ராபி போட்டியில் சதமடித்து அசதியுள்ளார். டெல்லி அணிக்காக களமிறங்கிய அவர், தமிழ்நாடு அணிக்கு எதிராக 113 ரன்களை எடுத்தார்.

இதன்மூலம் யாஷ் துள், அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்தவர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா ஆகியோரோடு இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe