/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GEW.jpg)
19 வயதிற்குப்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் யாஷ் துள்லை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தநிலையில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி ட்ராபியில், டெல்லி அணிக்காக அறிமுகமான யாஷ் துள், தமிழகத்திற்கு எதிரான அப்போட்டியில் சதமடித்து, அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்தவர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா ஆகியோரோடு இணைந்தார்.
இதனை தொடர்ந்து யாஷ் துள் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ரஞ்சி ட்ராபியில் அறிமுகபோட்டியிலயே இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் யாஷ் துள்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)