WTC FINAL

Advertisment

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருந்தது. ஆனால்அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் இரத்துசெய்யப்பட்டது.

இதனையடுத்து, இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் மழையின் காரணமாகவும், வெளிச்சமின்மை காரணமாகவும் சிறிய தடங்கலுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 102 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.

இந்தநிலையில், நான்காவது நாளான இன்று (21.06.2021) மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகிவருகிறது. இன்றைய நாள் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் நான்காவது நாள் ஆட்டம் இரத்தாகவாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நியூசிலாந்து வீரர்கள் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இறங்கியுள்ளனர். இரண்டு வீரர்கள் டேபிள் டென்னிஸ் விளையாடும் படத்தை நியூசிலாந்து அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.