/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fw3fwef.jpg)
டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.
மேலும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலத்தை வென்றுள்ளது. இந்தநிலையில்57 கிலோ பிரிவு மல்யுத்த இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியாவும்ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின்சவூர் உகுவேவும் மோதினர். இதில் ரவிக்குமார் தஹியா தோல்வியடைந்தார். இதனையடுத்துஅவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த ஒலிம்பிக் இந்தியா இதுவரை இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 3 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)