Skip to main content

இமாலய வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா; படைத்த புதிய வரலாறு என்ன?

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

worldcup match South Africa won new zealand cricket score update

 

உலக கோப்பையின் 32 வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில்  இன்று  நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா 24 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். பின்னர் இணைந்த டி காக், வேன் டெர் டுசைன் இணை நியூசிலாந்து பந்து வீச்சை பொறுமையாக எதிர்கொண்டாலும், அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் என வான வேடிக்கை காட்டினர். சிறப்பாக ஆடிய டி காக் இந்த உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். பின்னர் வேன் டெர் டுசைன் , மில்லர் உடன் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார். சதம் அடித்த அவர் தனது அதிரடியை நிறுத்தவில்லை.  ஒரு பக்கம் மில்லர் சிக்ஸர்களில் கவனம் செலுத்த, டுசைன் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என விளாசி, 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வழக்கம் போல அதிரடி காட்டிய மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 2 விக்கெட்டுகளும் , போல்ட், நீசம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே இரண்டு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். யங் மட்டும் நிதானமாக அடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் பிலிப்ஸ் மட்டும் அரைசதம் கடந்து 60 ரன்கள் எடுக்க, மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக மகராஜ் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், ஜெரால்ட் 2 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக விளையாடி 133 ரன்கள் எடுத்த வேன் டெர் டுசைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 23 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.

 

இந்தப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 357 ரன்கள் குவித்ததன் மூலம் உலக கோப்பைகளில் 350 க்கும் மேற்பட்ட ரன்களை 9 முறை அடித்த அணி என்னும் ஆஸ்திரேலியா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. உலகக் கோப்பை லீக் போட்டிகளில் 5 ஆட்டங்களில் 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 100க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்னும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், ஒரு அணியாக ஒரு உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்னும் இங்கிலாந்தின் சாதனையை (76)  முறியடித்து அதிக சிக்ஸர்கள் ( 82) அடித்த அணி என்கிற வரலாறு படைத்துள்ளது. 

- வெ.அருண்குமார்  

 


 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.