Published on 19/06/2021 | Edited on 19/06/2021

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், மழை இல்லாததால் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கவுள்ளனர்.