team india

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிநேற்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருந்தது. ஆனால்அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் இரத்துசெய்யப்பட்டது.

Advertisment

அதேநேரத்தில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று அரை மணிநேரம் முன்னதாக தொடங்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்களமிறங்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மழையின் காரணமாக அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் டாஸ் போடப்படாததால், களமிறங்கும் அணியில் மாற்றங்கள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தநிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் களமிறங்கவுள்ள அணியில் மாற்றங்கள் செய்யப்படுமாஎன கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரீதர், "ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணி, எந்தவொரு ஆடுகளத்திலும், எந்தவொருவானிலை சூழலிலும் விளையாடக்கூடியது. அதேநேரத்தில்டாஸ் இன்னும் போடப்படவில்லை. எனவே மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தால் டாஸின்போது முடிவு செய்வோம்" என கூறியுள்ளார்.