Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்; பரிசு விவரங்கள் அறிவிப்பு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

 World Cup Cricket; Notification of prize details

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அளிக்கப்படும் பரிசு விவரங்களைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

மேலும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 8 ஆம் தேதி முதல் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அளிக்கப்படும் பரிசு விவரங்களைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ. 16.5 கோடியும், அரையிறுதிகளில் தோற்கும் அணிக்கு தலா ரூ. 6.50 கோடியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. 

 

 

Next Story

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பரிசுகள் அறிவிப்பு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Announcement of prizes for Chennai metro train passengers

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நீல வழித்தடத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என 54.6 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் ‘சிங்கார சென்னை’ அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசுப் பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்காரச் சென்னை அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாகப் பயணம் செய்யும் முதல் 40 பயணிகளைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பரிசுப் பொருள் வழங்கப்படும்.

அந்தவகையில், 15.12.2023 முதல் 14.01.2024 வரை முதல் மாதம், 15.01.2024 முதல் 14.02.2024 வரை இரண்டாவது மாதம், 15.02.2023 முதல் 15.03.2024 வரை மூன்றாவது மாதம் என இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசுப் பொருட்களை வழங்கும். பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.