Advertisment

உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டி; டிராவில் முடிந்த முதல் சுற்று

nn

உலக கோப்பை செஸ் போட்டியில் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது.

Advertisment

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்றது.

Advertisment

இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை-பிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளார் .

இறுதியாக பிரக்ஞானந்தா (3.5) ஃபேபியானோ கருவானா (2.5) புள்ளிகள் எனக் களம் இளம் வீரருக்குச் சாதகமாக இருந்தது. முதல் இரண்டு டை பிரேக் ஆட்டங்களை டிரா செய்த பிரக்ஞானந்தா, மூன்றாவது கேமில் கருவானாவை வீழ்த்தி அடுத்த ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் கருவானாவை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே பிரக்ஞானந்தா, உலக நம்பர் 2 வீரர் ஃபேபியானோ மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஹிகாருவை வென்றுள்ள நிலையில், உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தாவால் வெல்ல முடியுமா என்பது தான் சதுரங்க வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கார்ல்சன்-பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. நாளை இரண்டாம் சுற்று போட்டி நடைபெற இருக்கிறது. இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிபிரக்ஞானந்தா இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe