Advertisment

உலகக்கோப்பை கிரிக்கெட்; பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

 World Cup 2023 practice games start today!

உலகக் கோப்பை 2023 தொடங்கும் முன்னதாக நடைபெறும்பயிற்சி ஆட்டங்கள் (வார்ம் அப்)இன்று தொடங்குகிறது. போட்டியின் அட்டவணை வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Advertisment

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

இந்த நிலையில், உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டங்களை அதாவது வார்ம் அப் ஆட்டங்கள், ஐசிசி அணிகளுக்கு இடையே மூன்று இடங்களில்நடக்கவுள்ளது. இது திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் கவுஹாத்தியில் செப்டம்பர் 29 தொடங்கி அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது. முதல் நாள் பயிற்சி ஆட்டம்இன்று தொடங்குகிறது. உலகக் கோப்பை பயிற்சி போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி, ஹைதரபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2.00 மணிக்கு விளையாட உள்ளது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் கேரளாவில் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்திலும், அடுத்து இலங்கை - வங்கதேசம், அஸ்ஸாமின் பர்சபரா ஸ்டேடியத்திலும் விளையாடவுள்ளது. மூன்று ஆட்டங்களும் இந்திய நேரப்படி 2.00 மணிக்கு துவங்குகிறது.

அதேபோல், நாளைய ( செப்டம்பர் 30, 2023 ) ஆட்டத்தில், இந்தியா-இங்கிலாந்து, கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், ஆஸ்திரேலியா - நெதர்லாந்து, திருவனந்தபுரம், கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்திலும் விளையாடவுள்ளது. இந்த ஆட்டங்களும் இந்திய நேரப்படி 2.00 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 2 , திங்கள், இங்கிலாந்து - வங்கதேசம், கவுகாத்தி, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா, திருவனந்தபுரம், கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்திலும் விளையாடவுள்ளது.

அடுத்து, பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான அக்டோபர் 3, ஆப்கானிஸ்தான் - இலங்கை,கவுகாத்தி,பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், இந்தியா - நெதர்லாந்து, திருவனந்தபுரம், கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்திலும், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா, ஹைதரபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும்விளையாடவுள்ளது. இதன் பிறகு, உலகக் கோப்பை லீக் சுற்று போட்டிகள் அக்.5ம் தேதி தொடங்கவுள்ளது.

cricket WorldCup
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe