/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ti20 india.jpg)
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நேற்று இரவு(இந்திய நேரப்படி) பாகிஸ்தானுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு மித்தாலி-மந்தனா ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 73 ரன்களை சேர்த்தது. இறுதியில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெற்றிப்பெட்டது. மித்தாலி 56 ரன்களை எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலில் இடத்தில் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)