ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' எனப் பெயர் இருப்பதைப்போல், இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு, 'பார்டர்- காவஸ்கர்' கோப்பைதொடர் என்ற பெயருள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன்பார்டர்,இந்தியஜாம்பவான்கவாஸ்கர் ஆகிய இருவரையும்கவுரவிக்கும் விதமாக, இரு அணிகளும்மோதும் தொடருக்கு, அவர்களின்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிரிக்கெட்உலகின்பைபிள் எனஅழைக்கப்படும் விஸ்டென்புத்தகம், 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 'பார்டர்-காவஸ்கர்' தொடர் அணியை தேர்ந்தெடுத்துள்ளது. இரு அணிகளின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள அந்த அணிக்கு இந்தியாவின் அனில் கும்ப்ளே கேப்டனாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஸ்டெனின் 21ஆம் நூற்றாண்டு அணியில், இந்தியதரப்பில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர். விராட்கோலிக்குஇந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
21 ஆம் நூற்றாண்டின் 'பார்டர்- காவஸ்கர்' தொடர் அணி பின்வருமாறு:ஹைடென், சேவாக், ஸ்மித், சச்சின், கிளார்க், லக்ஷ்மன், கில்கிறிஸ்ட், அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங்,ஜேசன்கிலெஸ்பி, மெக்ராத்.