இந்தியாவில் ‘கோவாக்சின்’, ‘கோவிஷீல்ட்’ என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா கரோனாதடுப்பூசிகளைவழங்கி வருகிறது.
அந்த வகையில் மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றானஜமைக்காவிற்கு, இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜமைக்காவைச்சேர்ந்த கிரிக்கெட் வீரர்களானகிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துகிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடி, இந்திய அரசு, இந்திய மக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என கூறியுள்ளார்.
அதேபோல் ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளியிட்டுள்ள வீடியோவில், "பிரதமர் மோடி மற்றும் இந்திய தூதரகத்திற்குப் பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகள் இங்கே உள்ளன. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உலகம் இயல்பு நிலைக்குச் செல்வதை நான் காண விரும்புகிறேன். ஜமைக்கா மக்கள் அதை மிகவும் பாராட்டுகிறார்கள்.இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்" என தெரிவித்துள்ளார்.