neymar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பிரேசிலைச் சேர்ந்த உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட வீரர் நெய்மர். அவரது அதிரடி ஆட்டங்களால் உலகப்புகழ் பெற்றிருந்தாலும், உலகக்கோப்பை போட்டியின்போது அவரது நடிப்பால் பலராலும் பேசப்படுகிறார்.

Advertisment

உலகக்கோப்பை கால்பந்தில் மெக்சிகோவுக்கு எதிரான போட்டியின்போது, நெய்மர் எதிரணிவீரர் மிகுவேல் தன்னை இடித்துவிட்டதாகக் கூறி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். அவரது இந்த செயல்பாடுகள் விமர்சனங்களையும், கண்டனங்களையும் ஒருபுறம் சந்தித்தாலும், நெய்மர் சேலஞ்ச் என பலரும் அவரைப் போலவே கீழே விழுந்து புரளும் வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வெளியாகின.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அந்தவகையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், சீனியர்களுக்கான போட்டி நேற்று நடந்தது. அதில் மான்சோர் பக்ராமி, கோரன், ஜோனாஸ் மற்றும் டாட் உட்பிரிட்ஜ் ஆகிய மூத்த வீரர்கள் இரட்டையர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சகவீரர் அடித்த பந்து ஜோனாஸின் முதுகில் பட்டதும் சகஜமாக எடுத்துக்கொண்ட அவர், திடீரென நெய்மரைப் போல கீழே விழுந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தார். அதைக் கவனித்த பக்ராமி ஓடிவந்து சி.ஆர்.பி. சிகிச்சை செய்வதுபோல் நடித்தார். இதனால், அரங்கத்தில் சிரிப்பலை உருவானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.