Skip to main content

விம்பிள்டன் டென்னிஸ்- ஜோகோவிச் சாம்பியன்!

Published on 11/07/2021 | Edited on 11/07/2021

 

 

Wimbledon tennis novak djokovic champion

விம்பிள்டன் டென்னிஸில் செர்பியாவின் ஜோகோவிச் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 

இத்தாலியின் பெர்ரெட்டினியை 6-7, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.