Advertisment

விம்பிள்டன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்!

Wimbledon Tennis; Algaras wins the championship

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அஸ்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Advertisment

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று (14.07.2024) நடைபெற்றது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் - ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் மோதினர். அதிக முறை பட்டம் வென்ற ஜோகோவிச்சை 6 - 2, 6 - 2 மற்றும் 7 - 6 என்ற கணக்கில் வீழ்த்தி இளம் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அல்காரஸ் பெறும் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

Advertisment

விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற அல்காரஸ் தொடர்ந்து 2வது முறையாக வென்று புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு விம்பிள்டன் பட்டத்தைத் தொடர்ந்து 2வது முறையாக வென்ற 4வது வீரர் என்ற சாதனையையும் அல்காரஸ் படைத்துள்ளார்.

champion djokovic tennis
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe