ADVERTISEMENT

கோலியை எட்டிப் பிடித்த வில்லியம்சன்! 

05:18 PM Dec 07, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்றைக்கு, உலக கிரிக்கெட்டில், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் மிகச் சிறந்த வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். அதை நிரூபிப்பது போலவே, கிரிக்கெட்டின் கடினமான வடிவமாகக் கருதப்படும் டெஸ்ட் போட்டி தரவரிசையில், முதல் 10 இடங்களுக்குள் இவர்கள் நான்கு பேரும் இடம் பெற்றுவிடுவார்கள்.

மேலும், இதில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்டகாலமாக முதல் இரண்டு இடத்தை தக்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஐ.சி.சி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வில்லியம்சன் விராட் கோலியை எட்டிப் பிடித்துள்ளார்.

இதுவரை ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 812 புள்ளிகளோடு 4 வது இடத்தில இருந்த வில்லியம்சன், தற்போது 74 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 886 புள்ளிகளோடு இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், ஏற்கனவே 886 புள்ளிகளோடு இருக்கும் விராட் கோலியோடு, இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விண்டீஸ் அணிக்கு எதிராக வில்லியம்சன் அடித்த இரட்டை சதம், இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித், 911 புள்ளிகளோடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT