Advertisment

கோலியை எட்டிப் பிடித்த வில்லியம்சன்! 

vk williamson

இன்றைக்கு,உலக கிரிக்கெட்டில்,விராட்கோலி, ஸ்டீவ்ஸ்மித், வில்லியம்சன், ஜோரூட்ஆகியோர் மிகச்சிறந்தவீரர்களாகக் கருதப்படுகிறார்கள். அதை நிரூபிப்பது போலவே, கிரிக்கெட்டின் கடினமான வடிவமாகக்கருதப்படும் டெஸ்ட் போட்டி தரவரிசையில், முதல் 10 இடங்களுக்குள் இவர்கள் நான்கு பேரும் இடம் பெற்றுவிடுவார்கள்.

Advertisment

மேலும், இதில்விராட்கோலி, ஸ்டீவ்ஸ்மித்ஆகியோர்நீண்டகாலமாக முதல் இரண்டு இடத்தைதக்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஐ.சி.சிபுதிய டெஸ்ட்தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வில்லியம்சன் விராட்கோலியைஎட்டிப் பிடித்துள்ளார்.

Advertisment

இதுவரை ஐ.சி.சிடெஸ்ட்தரவரிசையில் 812 புள்ளிகளோடு 4 வதுஇடத்திலஇருந்தவில்லியம்சன், தற்போது 74 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 886 புள்ளிகளோடுஇரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், ஏற்கனவே 886 புள்ளிகளோடுஇருக்கும்விராட்கோலியோடு, இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். விண்டீஸ் அணிக்கு எதிராக வில்லியம்சன் அடித்த இரட்டை சதம், இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஸ்டீவ்ஸ்மித், 911 புள்ளிகளோடுதொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

kane williamson virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe