Advertisment

சென்னை சூப்பர் கிங்சும் ராஜஸ்தான் ராயல்சும் ஒண்ணா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப்போலவே இரண்டு வருட தடை முடிந்து இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்க இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த் மற்றும் சவுகான் என்ற இரு வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டனர் என்று ஆரம்பித்து, பின்னர், அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா பெட்டிங் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டு வருடம் தடை செய்தது.

Advertisment

RR vs SR

இதே போன்ற பெட்டிங் புகாரில்சென்னை அணியும்இரண்டு வருடங்கள்தடை செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் முடிந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ்அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின்தடை முடிந்தது. இந்த வருட முதல் ஆட்டமே சென்னைக்கும் மும்பைக்கும் தான். அவர்களின் கம் பேக் எப்படி இருந்தது என்று ஏழாம் தேதி இரவு முழு ஆட்டத்தையும் பார்த்தவர்களுக்குத்தெரிந்திருக்கும். வழக்கம் போல மேட்சை த்ரில்லாக கொண்டு வந்து வெற்றி பெற்றுவிட்டனர். ராஜஸ்தானுக்கு இன்று தான் இரண்டு வருடம் கழித்து முதல் மேட்ச். அதுவும் முந்தைய வருட சேம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் ஆட இருக்கிறது.

Advertisment

rajasthan royals

இந்த இரு அணிகளின் பலமும் பலவீனமும் என்னவாக இருக்கும் என்கிற அலசலை தெரிந்து கொள்வோம். ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத்தின்முதல் பலவீனமே, அந்த அணிகளின்கேப்டன்களாகஇருந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், இருவர்மீதுமுள்ள தடை தான். ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலானமேட்சில் பால் டாம்பரிங் செய்ததால், உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுஐசிசிஐ இவ்விருவருக்கும்ஒருவருட தடை விதித்துள்ளது. இது இவ்விரண்டு அணிகளுக்கும் பலவீனமே. இருந்தாலும் ராஜஸ்தான் அணி இந்த வருட ஏலத்தில் விலை உயர்ந்த வீரர்களை எடுத்துள்ளது. பெண் ஸ்டோக்ஸ், உனட்கட் மற்றும் அஜின்க்யா ரஹானே போன்ற சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் பேட்டிங்குக்கு சிறந்த வீரர்களில்ஒருவராக பெண் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியா டி20யில் அதிக ரன்கள் அடித்த ஷார்ட் மற்றும் இங்கிலாந்து வீரர் பட்லர் இருக்கின்றனர். சஞ்சீவ் சாம்சன் என்ற அதிரடி இளம் வீரரையும் வாங்கியிருக்கின்றனர். ராஜஸ்தானுக்கு பலவீனம் என்றால் ஸ்டீவன் ஸ்மித்தின் தடையும், குறிப்பிட்ட அளவுடைய வீரர்கள் எண்ணிக்கையும் தான். இதில் ஒருவர் காயமடைந்தாலும் அணிக்கு சிரமம் தான்.

sun risers

2013ஆம்ஆண்டில் ஐபிஎல்லில் காலெடுத்து வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தொடக்கத்திலிருந்தே அரை இறுதி வரை செல்லும் ஒரு அணியாக இருக்கிறது. 2016இல் அதிரடியாக விளையாடிய பெங்களூர் அணியை ஃபைனலில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. இவர்களின் பலம் என்றால், அணிக்கான நல்லதொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் தவான், சிறந்த சர்வதேச பவுலரான புவனேஷ் குமார், விராத் கோலியை போன்ற ஒரு துடிப்பான கேப்டன் கேன் வில்லியம்சன்போன்றோர்தான். இது மட்டுமல்லாமல் அணியில் விளையாடும் இந்திய வீரர்களும் இந்த அணியில் நன்கு விளையாடுவதால், இந்த வருடம் டேவிட் வார்னர் இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இவர்களுக்குக்கிடைத்த பொக்கிஷம். ஆல் ரவுண்டர்கள் அதிகம் இருப்பதனால் பவுலிங், பேட்டிங் இரண்டிலுமே சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு பலவீனம் என்பது விக்கெட் கீப்பிங், பீல்டிங் போன்றவற்றில் தான்.

இன்று இரவுஹைதராபாத்ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுடன் தடை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போலவே ஒரு அசத்தல் கம்-பேக் கொடுக்குமா என்பதையும்கணிக்கப்பட்ட பலம், பலவீனம் சரியா இல்லை தவறா என்பதையும் இன்று மாலை பார்ப்போம்.

IPL theaterstrike ipl 2018 CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe