Advertisment

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவேன்! - டிவில்லியர்ஸ் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ், ஐ.பி.எல்.லில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

Advertisment

rcb

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ். மிஸ்டர் 360 டிகிரி, சூப்பர் மேன் என தனது அசத்தலான ஆட்டங்களால் புனைப்பெயர்களில் அழைக்கப்படும் இவர், சமீபத்தில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். நடந்துமுடிந்த ஐபிஎல் சீசனில் மிரட்டலாக விளையாடிய இவரது திடீர் ஓய்வு அறிவிப்பு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆனால், நல்ல ஃபார்மில் இருக்கும்போதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது ஆரோக்கியமாக இருக்கும் என அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த டிவில்லியர்ஸ், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவே விரும்புவதாக தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ‘இதுவரை வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடும் எந்தத் திட்டத்தையும் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட்டில் டைட்டான்ஸ் அணிக்காக விளையாடுவேன் என்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என் விருப்பம். இளம் வீரர்களுக்கு என்னால் சில உதவிகள் கிடைக்கலாம். ஆனால், அதிலும் நீண்டகாலத்திற்கு விளையாடுவேன் என்று உறுதியாக சொல்லமுடியாது. இந்தியாவில் என் கிரிக்கெட்டை நேசிக்க பலர் உள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

South Africa AB DeVilliers ipl 2018 indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe