Skip to main content

தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சினை சமாளிக்குமா இந்தியா; உலகக் கோப்பையில் பலப்பரீட்சை

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Will India tolerate South Africa's bowling? Multiple Tests in World Cup

 

அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று அனைத்தும் முடிவடைந்த பிறகு சூப்பர் 12 சுற்று நடைபெறுகிறது. 

 

அனைத்து அணிகளும் அரையிறுதி வாய்ப்பிற்காக போராடி வருகின்றன. இந்திய அணி தான் எதிர்கொண்ட இரு அணிகளிடமும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் பரபரப்பாக இறுதி ஓவர் வரை சென்று வெற்றி பெற்ற இந்திய அணி நெதர்லாந்து உடனான ஆட்டத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. 

 

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலைத் தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் அர்ஷ்தீப் சிங் அசத்துகிறார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுப்பதோடு குறைவான ரன்களையே விட்டுக் கொடுக்கின்றனர். இன்றும் இதே ஆட்டம் தொடர்ந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். 

 

தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டின் காக் மற்றும் ரூசோ நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சிலும் நூர்ட்ஜே மஹாராஜ் மற்றும் ஷாம்ஷி ஆகியோர் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்களை எடுக்கின்றனர். இரு அணிகளையும் ஒப்பிட்டால் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சில் ஒரு படி மேல் உள்ளது.  

 

இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை கொடுக்காமல் நிலையாக ஆடினால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இன்று மாலை 4.30 மணிக்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

 

Next Story

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி; இந்தியக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 World Cup Pakistan Defeat; Conflict among Indian college students

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர். 

 

இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

 

Next Story

பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்; டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

England win T20 World Cup; Amazing to beat Pakistan

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றன. 

 

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

இந்நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் மசூத் மட்டும் பொறுமையாக ஆடி ரன்களை எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது.

 

138 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இந்தியா உடனான போட்டியில் அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின் வந்த பிலிப் 10 ரன்களில் வெளியேறினார். ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். 19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.