ADVERTISEMENT

ஆசிய கோப்பை டி20: இந்தியா - பாகிஸ்தான் மோதல்; வெல்லப்போவது யார்?

07:22 PM Aug 28, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு உலகம் எங்கிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுடன் நேரடியாக விளையாடுவதை நிறுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

இதற்கு பல முன்னாள் இந்திய வீரர்களும் அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு போட்டிக்கு ஆவலாக காத்திருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி "ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது" என பதிவில் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

30 நாள் ஓய்வில் இருந்து திரும்பிய கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது அவருக்கு 100 வது டி20 கிரிக்கெட் போட்டியாகும். இதன் மூலம் அனைத்து விதமான போட்டிகளிலும் 100 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பையில் நேருக்கு நேராக 14 முறை மோதியுள்ளது. இதில் 8ல் இந்தியாவும் 5ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் மழையால் முடிவு இல்லை.

இந்திய வீரர்கள் விபரம் :ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

பாக்கிஸ்தான் வீரர்கள் விபரம்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT