Advertisment

மோசமான சாதனையில் யார் முதலிடம்? - போட்டி போட்ட இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள்

Who on top for worst achievment India and South Africa team to compete

Advertisment

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. காயம் காரணமாக பவுமா விளையாடாத நிலையில், எல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். டாஸ் வென்ற எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் 2 ரன்னிலும், கேப்டன் எல்கர் 4 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்தஜொர்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பெடிங்காம் 12, வெர்ரெய்ன் 15 தவிர இரட்டை இலக்கத்தை தாண்டாமல் அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராககுறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது.153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

Advertisment

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்கஅணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- வெ.அருண்குமார்

cricket India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe