Advertisment

ஐபிஎல் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்; ரெய்னாவின் தேர்வு யார்?

Who is Raina's pick as the best bowler in IPL?

ஐபிஎல் 2023 கொண்டாட்டம் இன்னும் சிலதினங்களில் தொடங்கப்பட உள்ள நிலையில் மகளிர் பிரீமியர் லீக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஜியோ சினிமா இப்பொழுதே ஐபிஎல் மீதானஎதிர்பார்ப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஓஜா, உத்தப்பா, பார்த்திவ் படேல் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வினை ஜியோ சினிமா நடத்தியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம், ஐபிஎல்லில் அனைத்து நேரங்களிலும் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு மலிங்கா, பும்ரா, சினில் நரைன், ரஷித் கான், பிராவோ ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ரெய்னாவோ சற்றும் யோசிக்காமல் 39 வயதான முன்னாள் இலங்கை அணியின் கேப்டனான மலிங்கா தான் சிறந்த பந்துவீச்சாளர் என்றார்.

இது குறித்து விளக்கம் கொடுத்த ரெய்னா, “பந்து வீச்சாளராக போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது மிகக் கடினமான செயல். அதுமட்டுமின்றி 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மலிங்கா அணிக்கு சிறந்த தரத்தை கொண்டு வந்துள்ளார்” என்றார். மேலும், ரெய்னாவின் இந்த தேர்வைஆர்.பி.சிங், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல் ஆகியோர் அங்கீகரித்தனர். ஆனால் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஓஜா மட்டும் தனது தேர்வாக ஹர்பஜன் சிங் தான் சிறந்த பந்து வீச்சாளர் என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe