jadeja

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று (05.11.2021) நல்ல ரன் ரேட்டுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisment

இருப்பினும், நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமேஇந்திய அணி அடுத்த சுற்றுக்குள்நுழையலாம் என்றநிலை நீடிக்கிறது. இந்தநிலையில், நேற்றைய போட்டிக்குப் பிறகானசெய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தவில்லை என்றால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்குப் பதிலளித்த ஜடேஜா, "மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான். வேற என்ன பண்றது" என பதிலளித்தார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்தனர். தற்போது ஜடேஜா பதிலளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.