மருத்துவமனையில் கங்குலி! - முதல்வர், ஆளுநர் நேரில் சந்திப்பு..

ganguly

இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கங்குலிக்கு தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைநடைபெற்றுள்ளது. கங்குலியின் இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும்கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், அடுத்த 24 மணி நேரத்திற்குகங்குலி கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்கமுதல்வரும், ஆளுநரும்கங்குலியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்து மேற்கு வங்க ஆளுநர், "நான் தாதாவுடன் உரையாடினேன். அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். நான் பெரிதும் நிம்மதியடைந்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் கங்குலியை நேரில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "அவர் (சவுரவ் கங்குலி) இப்போது நன்றாக இருக்கிறார், அவர் என்னிடம் கூட பேசினார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இங்குள்ள மருத்துவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

BCCI PRESIDENT mamata banarjee sourav ganguly
இதையும் படியுங்கள்
Subscribe