Advertisment

உலகக்கோப்பை எங்களுக்குத்தான்! - பாக். வீரர் ஃபகர் ஜமான்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை வெல்ல பல அணிகளும் முனைப்புகாட்டி வருகின்றன. அதேபோல், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரின்போதும் கோப்பையை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள அணி என சில கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அந்த வகையில், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள்தான் சாம்பியன் என பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஃபகர் ஜமான், “தற்போதிருக்கும் பாகிஸ்தான் அணி கட்டுக்கோப்பான நிலையில் இருக்கிறது. சில நல்ல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். சமீபத்திய வெற்றிகளும், சாதனைகளும் அணிக்கு இன்னமும் பலம் சேர்க்க உறுதுணையாக இருக்கும். இங்கிலாந்தில் வெறும் எண்ணிக்கையாக இல்லாமல், உலகக்கோப்பையை வெல்லும் முனைப்போடு செல்வோம். வரும் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் தகுதியுள்ள அணியாக பாகிஸ்தான் இருக்கும். அதற்கான முழு பயிற்சிகளையும் எங்கள் அணி மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரராக களமிறங்கி விளையாடி வரும் ஃபகர் ஜமான், அதிரடியாக விளையாடி வருகிறார். சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின்போது கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தில் இருப்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Fakhar zaman Pakistan cricket sports WorldCup
இதையும் படியுங்கள்
Subscribe