Advertisment

என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்... ஓய்வை அறிவித்த பின் வாட்சன் உருக்கம்!

watson

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் அதிரடி வீரர் வாட்சன் அறிவித்துள்ளார்.

Advertisment

சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற வாட்சன், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். நடப்பு தொடரில் சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதிய கடைசி போட்டியே வாட்சனுடைய கடைசி போட்டியென்றும், அவர் விரைவில் ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வாட்சன் உருக்கமாகப் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தற்போது ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" எனப் பேசியுள்ளார்.

இதனையடுத்து, வாட்சனுக்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் சென்னை அணி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ipl 2020 shane watson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe