2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி சென்னையை இறுதி கட்டம் வரை அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அவர் கடைசி ஓவரில் தான் ரன் அவுட் ஆனார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அடிபட்ட காலுடன் 12 ஓவர்கள் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இறுதிப்போட்டி முடிந்த பின்னர் ஷேன் வாட்சன் காயத்துடன் மெதுவாக நொண்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.