Advertisment

சென்னை அணி ரசிகர்கள் குறித்து வாட்சன் உருக்கம்!

Shane Watson

13-ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி மற்றும் தோல்விகளை அடிப்படையாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்பட இருக்கிறது. தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் அசுர பலத்துடன் வலுவான நிலையில் உள்ளதால், சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அணியின் அதிரடி வீரரான வாட்சன் இனி வரவிருக்கும் நான்கு போட்டிகள் குறித்தும், சென்னை அணியின் ரசிகர்கள் குறித்தும்பேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "வரவிருக்கும் நான்கு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டியை நம் பக்கம் திருப்ப வேண்டும். என்னால் ஒரு விஷயத்தை உறுதியளிக்க முடியும். எஞ்சியுள்ள போட்டிகளில் வீரர்கள் அதிகபட்சமாக அவர்களால் என்ன ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை வெளிப்படுத்துவார்கள். சென்னை அணி ரசிகர்கள் அளவற்ற அன்பையும், ஆதரவையும் எங்களுக்கு அளிப்பதை நாங்கள் அறிவோம். அதற்கு கைம்மாறு செய்வதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" எனக் கூறினார்.

Advertisment

ipl 2020 shane watson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe