Advertisment

யூடியூப்பில் மெர்சல் காட்டிய சிறுவனுக்கு திறன் பயிற்சி! - வாக்குத் தவறாத வாசிம் அக்ரம்!

யார்க்கர்கள் என்றால் ஒரு காலத்தில் வாசிம் அக்ரம் என்ற பொருள்படும். அந்தளவுக்கு எதிரணியினரை கதிகலங்கச் செய்து, களத்தை விட்டு வெளியேற்றியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். அப்படிப்பட்ட வாசிம் அக்ரமே அசந்துபோகும் அளவுக்கு சிறுவன் ஒருவன் பந்துவீசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

Advertisment

சுவரில் சாய்த்துவைக்கப்பட்ட குச்சி ஒன்றை ஸ்டம்ப் எனக் கருதி, இடதுகையில் பந்துவீசும் அந்த சிறுவன் துல்லியமாக பவுல்டு ஆக்கும் வீடியோ காட்சி ஒன்று சில வாரங்களுக்கு முன்பு வைரலாகின. பத்து வயத்துக்குள் இருக்கும் இந்த சிறுவன் இன் ஸ்விங்கர் மூலமாக பந்துவீசும் காட்சி பார்க்கும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனாலும், இந்த சிறுவன் யார் என்ற தகவல் வெளியாகமல் இருந்தது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவாசிம் அக்ரம், ‘இந்த சிறுவன் எங்கே இருக்கிறான்? நம் நாட்டின் நரம்புகளினூடே இதுபோன்ற திறமை பரவிக்கிடக்கிறது. ஆனால், இதுபோன்ற குழந்தைகளுக்கு சரியான பாதை அமைத்துத் தரத்தான் முடியவில்லை. நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டிய தருணம் இது’ என தெரிவித்திருந்தார்.

Advertisment

வெறும் பதிவுடன் தனது ஆதங்கத்தை நிறுத்திக் கொள்ளாமல், அந்தச் சிறுவனை அழைத்து தற்போது வாசிம் அக்ரம் பயிற்சி அளித்துவருகிறார். இதுகுறித்து வாசிம் அக்ரம், சீச்சாவாட்னி பகுதியில் இருந்து வந்திருக்கும் ஹாசனுடன் மிக பயனுள்ள நேரத்தைக் கழித்ததில் மிகுந்த உற்சாகமடைகிறேன். இந்த வயதில் இவனுக்குள் இருக்கும் திறமையை நம்பவே முடியவில்லை. நினைவிற்கொள்ளுங்கள் இவனுக்கு வயது வெறும் 6.5 மட்டுமே’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pakistan Wasim Akram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe