Advertisment

ஐ.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் - வாசிம் அக்ரம் விருப்பம்!

Wasim Akram

ஐ.பி.எல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களும், பி.எஸ்.எல் தொடர்களில் இந்திய வீரர்களும் விளையாடுவதை தான் பார்க்க விரும்புவதாகபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்துப் பேசியுள்ள வாசிம் அக்ரம், "20 ஓவர் போட்டி தொடர், இளம் மற்றும் மூத்த வீரர்களுக்கு சரியான தளமாக உள்ளது. போட்டிகளில் விறுவிறுப்பு அதிகமாகிவிட்டது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். பந்துவீச்சாளர்கள் புதுவகையான உத்திகளுடன் செயல்படுகின்றனர். டெஸ்ட் போட்டிகளிலும் இதன் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இது கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறியாகத்தான் தென்படுகிறது. விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். இது இரு நாட்டு அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் கருத்துக்கூற ஏதுமில்லை. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் உலக அளவில் பிரபலமானதாக இருக்கிறது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கெடுப்பதையும், பாகிஸ்தானில் நடைபெறும் பி.எஸ்.எல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கெடுப்பதையும் பார்க்க ஆவலாக உள்ளேன்" எனக் கூறினார்.

Advertisment

IPL Wasim Akram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe