Skip to main content

(வீடியோ) “ஊருக்கே வாழ்ந்துயர்ந்தவன் புனிதன்” -நடராஜனை புகழ்ந்த வாஷிங்டன் சுந்தர்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Washington Sundar

 

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரரான நடராஜன், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் இளம் வீரரான  வாஷிங்டன் சுந்தர், நடராஜனை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினியின் பாடலைப் பாடி ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

 

தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ரஜினி நடிப்பில் வெளியான 'படையப்பா' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'வெற்றிக்கொடி கட்டு' பாடலின் வரிகளைப் பாடி, 'கடின உழைப்புக்கு மாற்று ஏதுமில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

"இவர் இருக்கும் போது நான் டல்லாக இருந்ததில்லை" - கிரிக்கெட் வீரர் நடராஜன் 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Indian cricketer Natarajan talk about pugazh

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் 'வலிமை', அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'யானை','ஏஜென்ட் கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

 

இந்நிலையில் புகழ், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்,"புகழ் அண்ணா இருக்கும் பொழுது நான் டல்லாக இருந்தது இல்லை, என்னுடைய அழைப்பை ஏற்று எனது வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

ஐபிஎல் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் - மாற்று வீரரை அறிவித்த ஆர்.சி.பி!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

washington sundar

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

 

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தற்போது மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பெறவுள்ளார்.