இந்தியகிரிக்கெட்அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள்மற்றும் இருபது ஓவர் போட்டிகள்முடிவடைந்துவிட்டது. அடுத்து டெஸ்ட்தொடர் தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரானஒருநாள் போட்டித்தொடரின்போது, இடுப்பு பகுதியில் காயமடைந்த வார்னர், இந்திய அணிக்கு எதிரானமுதல் டெஸ்ட்போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் வேகமாக குணமாகி வந்தாலும், முழு உடல் தகுதியை எட்டுவதற்கு மேலும் 10 நாட்கள் வேண்டும் என்பதால், முதல் டெஸ்ட்போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா -ஆஸ்திரேலியா மோதியஇரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்த வார்னர், இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியிலிருந்தும், அதன்பிறகு நடந்த இருபது ஓவர்தொடரிலிருந்தும் விலகியநிலையில், தற்போது முதலாவதுடெஸ்ட்போட்டியிலிருந்தும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.