செஸ்ஒலிம்பியாட்போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்குச் சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹங்கேரி தலைநகர்புடாபெஸ்ட்டில்45வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணிஸ்லோவேனியாவையும், மகளிர் அணிஅஜர்பைஜானையும்எதிர்கொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கம் வென்றது. இது இந்தியசெஸ்விளையாட்டு வரலாற்றில், வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனப் பலரும் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்தியசெஸ்ஆணியில்பிரக்ஞானந்தா,வைசாலிமற்றும்குகேஷ்ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இத்தகைய சூழலில்ஹங்கேரியில் இருந்துஇன்று அதிகாலையில் பிரக்ஞானந்தாமற்றும்வைசாலிஆகிய இருவரும் தமிழகம் திரும்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்துகுகேஷும்இன்று காலை சென்னை திரும்பி இருந்தார். இந்நிலையில்செஸ்வீரர்கள் மூன்று பேருக்கும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழக அரசு சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.