இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகராகுல் ட்ராவிட் நியமிக்கப்படவுள்ளார் என அண்மைக்காலமாக தொடர்ந்து தகவல் வெளியாகிவந்த நிலையில், அண்மையில் பிசிசிஐ ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை ஏற்கப்போவதுயார் என்ற கேள்விஎழுந்தது. இந்நிலையில், அண்மையில் வி.வி.எஸ். லட்சுமணனை அப்பொறுப்பில் நியமிக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை ஏற்க வி.வி.எஸ். லட்சுமண்சம்மதித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலைவி.வி.எஸ். லட்சுமண்உறுதி செய்துள்ளார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பைஏற்கப்போவதாகவெளியான தகவலைரீட்விட்செய்து, தம்ஸ்அப் ஸ்மைலியைப் பதிவிட்டுள்ளார்.